Tuesday, 12 April 2011

உலகம் அழியுதா?

இந்த உலகம்  அழியுதா? இந்த கேள்வி தேவையா? இது நல்லதா? கெட்டதா? எதுக்கு இதை படிக்கணும் ? முதல் முதலா நான் உலகம் அழியுறத பத்தி ஒரு யோகா வகுப்புல தான் கேட்டேன். நாலு யுகம் இருக்குதுனும் அதுல கலி யுகம் தான் கடைசி, அதுவும் 2000 வருஷத்துல அழியுமுனு சொன்னாங்க. அதனால 2000 துல உலகம் அழிந்து விடும் என்கிற நம்பிக்கை கலந்த அவநம்பிக்கைல இருந்தேன். ஆனா எதுவும் நடக்கல. இப்ப வரை நாம நல்ல தான் இருக்கோம். ஆனா நாம சும்மா இல்ல.
2012 ல உலகம் அழியுமுனு சொல்றோம்.

இது உண்மையா? எதுக்கு இந்த மாதிரி ஒரு விஷயத்த பரப்புகிறோம். அதை நம்பவும் செய்கிறோம். நமக்கு என்ன தான் தேவை? நமக்கு உலகம் அழியனும்னு ஆசையா? இல்லை. நமக்கு அசை போட எதாவது ஒரு சுவாரசியமான விஷயம் தேவை. அவ்வுளவு தான். எவன் கெட்டா நமக்கு என்ன? உலகம் உண்மைலேயே எதனால அழிய போகுது?

அதுக்கு காரணமா இருக்க போறது நாம தான். அதாவது மனுசங்க தான். மனுஷன் என்ன தான் பண்றான்? ஆறாவது அறிவை எதுக்கு தான் பயன்படுத்துறான். உலக நன்மைக்காகவா? அவனை பொறுத்தவரை உலகம்னா என்ன? எல்லா உயிர்களையும் கொண்டது தான் உலகமா? இல்லை. ஆறாவது அறிவின் ஆணவம் காரணமாக அந்த உண்மையை மறந்து விட்டோமே! மனிதன் உலகம் தனக்கு மட்டும் தான் சொந்தம் என முடிவு பண்ணிவிட்டான். அதன் விளைவு, அவனுடைய உலகத்துக்கு நன்மை செய்வதாக எண்ணி உலகத்துக்கு தீமை விளைவிக்கிறான். முடிவில், உலகம் அழிய காரணமாக போகும் கருவி மனிதன் தான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? நானும் மனிதன் தானே! என்னால் முடிந்த வரை உலகத்தை அழித்து கொண்டு தான் இருக்கின்றேன்....இயற்கையை மாற்றுவதன் மூலம்.... 

1 comment: